இந்திய அரசியலமைப்பின் தந்தை - அம்பேதகர் பற்றிய வகுப்பு மற்றும் தகவல்கள்

மாமேதை அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் வகுப்பு

Touch Here for YouTube Class

பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்

v  இயற்பெயர்   - பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்

v  காலம்              - 14.04.1891 முதல் 06.12.1956 வரை

v  பிறப்பு             - அம்பவாதே, இரத்தினகிரி மாவட்டம், மகாராஷ்ட்ரா

v  பெற்றோர்     - ராம்ஜி சக்பால்பீமாபாய்

v  தந்தை             - இராணுவப்பள்ளி ஆசிரியர்

v  மனைவி         -  இராமாபாய், சவிதா

v  ஆசிரியர்         - கிருஷ்ணா கேசவ் மகாதேவ் அம்பேத்கர்

 

பிறப்பு & தொடக்க கல்வி

·         தீண்டாமைக்கு ஆட்பட்ட மகர் சாதியில்பெற்றோருக்கு 14 வது குழந்தை

·         தொடக்க கல்விசதாராவில் உள்ள பள்ளி

·         1904 - குடும்பம் மும்பைக்கு குடிபெயர்வு

Ø  மும்பை எல்பின்ஸ்டன் பள்ளியில் சேர்ந்தார்

Ø  1907 இல் பள்ளிப்படிப்பு முடிவு

 

உயர்கல்வி

·         1912 - இளங்கலைப் பட்டம் - மும்பை பல்கலைக்கழகம்

Ø  பரோடா மன்னர் சயாஜிராவ் உதவியுடன்

·         உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம்முதல் இந்தியர்

Ø  கொலம்பியா பல்கலைக்கழகம்பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல்

·         1915 – முதுகலைப்பட்டம் – “பண்டைக்கால இந்திய வணிகம்என்ற ஆய்விற்காக

·         1916 – இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்ஆய்வுக்கட்டுரை, சிறுபுத்தகம்

Ø  அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல்

·         1920பொருளாதாரப் படிப்பிற்காக இலண்டன் பயணம்

·         1921 – முதுநிலை அறிவியல் பட்டம்

·         1923 – முனைவர் பட்டம் (DSC)– இலண்டன் பொருளாதாரப் பள்ளி

Ø  ரூபாய் பற்றிய பிரச்சனை என்ற கட்டுரைக்காக

Ø  ரூபாயின் பிரச்சனைகள் அதன் தோற்றமும் தீர்வும் என்றும் அழைக்கப்படுகிறது

Ø  இந்த நூலின் வழிகாட்டலின் படியே இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கம். (1935)

·         1923 – பாரிஸ்டர் பட்டம்சட்டப்படிப்பில்

 

செயல்பாடுகள்

·         1920மூக் நாயக் என்ற பத்திரிக்கை தொடங்கினார்வாய் பேச முடியாதவர்களின் தலைவர்

·         1924ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை (பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை)

Ø  தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு

·         1927ஒடுக்கப்பட்ட பாரதம் (பஹிஷ்கிரித் பாரத்)– இதழ்

·         1927, மார்ச் 20மஹத் சத்தியாகிரகம்பொது குளங்களில் ஒடுக்கப்பட்டோர் நீர் எடுப்பதற்கு இருந்த தடையை எதிர்த்துமகத் மார்ச் பேரணி

·         1927 - சமாஜ் சமாத சங்கம் என்ற அமைப்பு உருவாக்கம்

·         1930, மார்ச் 2நாசிக் கலாராம் கோவில் நுழைவு போராட்டம்

·         மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார் – 1930, 1931, 1932

·         1932, செப்டம்பர் 24பூனா ஒப்பந்தம்காந்தி-அம்பேத்கர் இடையே

Ø  இரட்டை வாக்குரிமைக்கு பதில் காங்கிரஸ் உள்ளேயே இட ஒதுக்கீடு

Ø  காந்தியின் (இந்து) சார்பாக கையொப்பமிட்டவர் மதன்மோகன் மாளவியா

·         1936மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்காக கட்டுரை தயார் செய்தார்

Ø  சாதி ஒழிப்புஎன்ற தலைப்பில் கட்டுரை

Ø  மாநாடு நடைபெறாததால் புத்தகமாக வெளியிட்டார்

·         1936சுதந்திரத் தொழிலாளர் கட்சி உருவாக்கம்

Ø  1937 தேர்தலில் அவரும், அவருடைய கட்சி நபர்கள் 15 பேரும் வெற்றி

·         1942பட்டியல் இனத்தவர் கூட்டமைப்பு உருவாக்கம்

·         1942பாதுகாப்புத்துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்.

·         1946பம்பாய் தேர்தலில் வெற்றி பெற்றுஅரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்வு

·         1947அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவர்

·         காந்தியின் கிராம சுயாட்சி முறைகளை எதிர்த்தார்

Ø  அரசியலமைப்பில் பஞ்சாயத்து இடம்பெறவில்லை

 

சுதந்திரத்திற்குப் பின்

·         சுதந்திரத்திற்கு பின் நேரு அமைச்சரவையில்சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்

·         உலக பௌத்த சமய மாநாடுகளிலும், இலங்கையில் நடைபெற்ற புத்த துறவிகள் கருத்தரங்கிலும் கலந்து கொண்டார்.

·         1956, அக்டோபர் 14 - நாக்பூர்இலட்சக்கணக்கான மக்களோடுபுத்த மதம் மாறினார்

·         1956, டிசம்பர் 6இறப்பு

·         1957 -இறப்பிற்கு பின் அவர் எழுதிய புத்தரும் அவரின் தம்மமும்என்ற நூல் வெளியீடு

·         1990பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

 

புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்

·         1915பண்டைக்கால இந்திய வர்த்தகம்

Ø  கொலம்பியா பல்கலைக்கழகத்தில்முதுகலைப் பட்டத்திற்காக

·         இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றிய வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை

Ø  முனைவர் பட்டத்திற்காக

·         1916 - இந்தியாவில் சாதிகள் (தோற்றமும் வளர்ச்சியும்)

·         பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதிகளின் மதிப்பீடு

·         இந்தியாவில் குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்

·         ரூபாயின் பிரச்சனைகள் – 1923

·         சாதி ஒழிப்பு – 1936, மே 15

·         புத்தரும் அவரின் தம்மமும் – 1957

·         புத்தா அல்லது காரல் மார்க்ஸ்

·         பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை

தொடங்கிய அமைப்புகள்

·         1924ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை

·         1936சுதந்திரத் தொழிலாளர் கட்சி

·         1942பட்டியலினத்தவர் கூட்டமைப்பு

·         1955பாரதிய புத்தா மகா சபா

 

நடத்திய இதழ்கள்

·         1920மூக் நாயக்

·         1927பஹிஷ்கிரித் பாரத்

·         1928சம்தா

·         1930ஜன்தா

·         1956பிரபுத்தா பாரத்

 

பொன்மொழிகள்

·         கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்

·         சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைக் கற்றுக் கொடுக்கும் மதமே நான் விரும்பும் மதம்

·         தன்னை உயர்ந்தவனாகவும், மற்றோரை தாழ்ந்தவர்களாகவும் எண்ணுபவன் மனநோயாளி

·         நான் வணங்கும் தெய்வங்கள் மூன்றுஅறிவு, சுயமரியாதை, நன்னடத்தை

 

சிறப்புகள்

·         இந்திய அரசியலமைப்பின் சிற்பி

·         இந்திய அரசியலமைப்பின் தந்தை

·         இந்தியாவின் மனு

·         சமதர்ம காவலர்

·         சமூகநீதி பாதுகாவலர்

·         பாபா சாஹிப்மரியாதை உடைய தந்தை

Comments

Popular posts from this blog

இந்திய வரலாறு

TNPSC Group 4 Notification